Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி நடத்தப்பட்ட ஜெபக் கூட்டம்! சுற்றிவளைத்த அதிகாரிகள்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவை - மோருக்குளிய பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ஜெபக் கூட்டத்தை நடத்தியவர்களை தங்கொட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தங்கொட்டுவை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் மற்றும் தங்கொட்டுவை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார துறையினர் மற்றும் பொலிஸார் வழங்கியுள்ள ஆலோசனைகளை மீறி இவர்கள் ஜெபக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்ததாக தங்கொட்டுவை சுகாதார அதிகாரியின் அலுவலகம் கூறியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மோருக்குளிய பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தின்உறவினர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் மாரவில நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Post a Comment

0 Comments