Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு வேளையில் யாழில் பரிதாபமாக பறிபோன உயிர்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பத்தலைவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக தண்ணீர் பாய்ச்சி கழுவிக் கொண்டிருந்த போது, அதிலிருந்து மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது. அதன்போது குடும்பத்தலைவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
சம்பவத்தையடுத்து அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மல்லாகம் துர்க்காபுரத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான சண்முகராஜ் செந்தூரன் (வயது-51) என்பவரே உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments