Home » » மகிழ்ச்சி கழிப்பில் சீனா! பீதியில் உலக நாடுகள்! விடை தெரியாத இரு கேள்விகளுடன் தொடரும் மர்மம்...

மகிழ்ச்சி கழிப்பில் சீனா! பீதியில் உலக நாடுகள்! விடை தெரியாத இரு கேள்விகளுடன் தொடரும் மர்மம்...

சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் தற்போது வெறும் 1,863 பேர்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏனையவர்கள் குணப்படுத்தப்பட்டு வீடு சென்றுள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகின்றது. உலகளவில் 45 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 9 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தியா இலங்கை உட்பட 190 இற்கும் மேற்பட்ட நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா போன்ற நாடுகள் பாதிப்புக்கள் அதிகமாகி இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நாடுகளில் தினம் தினம் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுவருகின்றமை உகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இது இவ்வாறிருக்க சர்வதேச மட்டத்தில் சீனா மீது சந்தேக கண்ணோடு பல கேள்விகள் தொடுக்கப்படுகின்றன.

டிசம்பர் 1ம் திகதி முதல் நபர் கொரோனா வைரஸோடு சீனாவில் வுஹனில் அனுமதி ஆனார். அதன்பின் சீனாவின் வுஹன் நகரத்தில் மட்டும் வரிசையாக 37 பேர் கொரோனா வைரஸ் தாக்கி அனுமதி ஆனார்கள்.

வுஹன் நகரத்தில் இருக்கும் மார்க்கெட் ஒன்றில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்போது தொடங்கிய இந்த வைரஸ் காரணமாக தற்போது உலகம் முழுக்க மொத்தம் 938,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 47,286 பேர் பலியாகி உள்ளனர். 195,387 பேர் இதில் இருந்து இதுவரை விடுபட்டு உள்ளனர். அதிகமாக அமெரிக்காவில் 215,344 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5112 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 110,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 13155 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 104,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9387 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க பல நாடுகளில் இதே தீவிரத்துடன் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

ஆனால் உலகில் முதல் முதலில் கொரோனா தோன்றிய சீனாவில் தற்போது நிலை இவ்வளவு மோசமாக இல்லை.

சீனாவில் மொத்தமாக கொரோனா காரணமாக இதுவரை 81,589 பேர் பாதிக்கப்பட்டனர். அங்கு தற்போது 76,408 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1863 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் அங்கு 3,318 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் தற்போது கொரோனா முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அங்கு தினமும் 15-30 பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்படுகிறது. அதிலும் 30 பேர் வரை வெளிநாட்டு பயணிகள். புதிதாக உள்நாட்டு மக்களுக்கு அங்கு கொரோனா இல்லை.

அதேபோல் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட மாகாணங்களில் 700 பேருக்கும் குறைவாகவே மொத்தமாக கொரோனா ஏற்பட்டுள்ளது.

இதுதான் தற்போது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சீனா எப்படி இவ்வளவு வேகமாக நோயாளிகளை குணப்படுத்தியது. ஒரு நோயாளியை தற்போது இருக்கும் சாதரண மருத்துவ முறைகளில் குணப்படுத்த குறைந்தது 21 நாட்கள் ஆகும். அதிலும் தீவிரமாக நோயாளிகளை குணப்படுத்த 30 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் 76,408 நோயாளிகளை 50 நாட்களில் (பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து) சீனா குணப்படுத்தி உள்ளது.

இது எப்படி சாத்தியமாகும்? சீனா எவ்வாறு குணப்படுத்தியது? மருந்தை வைத்துக்கொண்டு மறைக்கின்றதா? என உலகளவில் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

கொரோனா தொடர்பாகவும் அதில் இருந்து சீனா தப்பித்தது தொடர்பாகவும் இரண்டு முக்கியமான கேள்விகள் உலகம் முழுக்க சீனாவிற்கு எதிராக எழுந்துள்ளது.

1. கொரோனாவிற்கு மருந்து இல்லாமல் இத்தனை நோயாளிகளை, இவ்வளவு வேகமாக சீனா எப்படி குணப்படுத்தியது. மருந்துகளை வைத்துக்கொண்டு சீனா மறைக்கிறதா?

2. உலகின் மூலை முடுக்கெல்லாம், ஏன் அமேசான் காட்டிற்கு கூட பரவிய கொரோனா வைரஸை எப்படி சீனா தன் நாட்டில் உள்ள பிற மாகாணங்களுக்கு பெரிய அளவில் பரவ விடாமல் தடுத்தது என்று கேள்வி எழுந்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |