Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சக்தி வாய்ந்த மின்னல் உருவாகும்! விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் சக்தி வாய்ந்த மின்னல் குறித்து வானிலை மத்திய நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரவு 11 மணிவரை நீடிக்கும் என்றும் வானிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் சப்ரகமுவ, மத்திய மாகாணம், ஊவா, வட மத்திய மாகாணம், கொழும்பு, களுத்துறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் சக்தி வாய்ந்த மின்னல் தாக்கமும் ஏற்படக் கூடுமென்றும் வானிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments