வெளிநாடுகளில் பணிபுரியும் ஸ்ரீலங்கா பணியாளர்களை பாதுகாப்பது மற்றும் அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு இயலுமான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொழில் உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தின் அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்காவிலிருந்து தொழில்வாய்ப்புகளுக்காக சென்றுள்ளவர்களில் அதிகமானோர் மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க வலயங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் தங்கியிருந்து தொழில்புரியும் பணியாளர்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை ஒன்றை தயாரிப்பது தொடர்பில் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொழில் வாய்ப்பை இழந்துள்ள பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கீழ் பதிவு செய்யாதவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
0 Comments