திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியூடாக திருகோணமலை நோக்கி பொருட்கள் ஏற்றிக்கொண்டு சென்ற லொறி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு தொகை உபயோகத்திற்கு உதவாத பொருட்களுடன் சென்ற லொறியே இன்று தடுத்து நிறுத்தப்பட்டு பொருட்களை கைப்பற்றியதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற லொறியொன்று அக்போபுர இராணுவ சோதனை சாவடியில் வைத்து வழிமறிக்கப்பட்டதாகவும், அதனை சோதனையிட்டபோது அதற்குள் பாவனைக்குதவாத உலர் உணவுகள் ஒரு தொகை காணப்பட்டுள்ளது. அதளையடுத்து பொருட்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பொருட்களை கொண்டு சென்ற லொறியின் சாரதியையும், உதவியாளரையும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த லொறியில் பாவனைக்குதவாத உலருணவுப் பொருட்களான மா, பருப்பு, சோயாமீட் மற்றும் மாசி கருவாடு போன்றன இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் அனுமதியுடன் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் இச்சோதனைகள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments: