Home » » இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம்

இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முடிந்தளவு தூரத்தில் இருந்து இயக்க கூடிய Medimate என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படையினர் தயாரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு அருகில் செல்லாமல் சிகிச்சையளிக்க கூடிய தூர கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய இந்த இயந்திரம் துஷார கெழும் என்பவரின் வழிக்காட்டலில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் நேற்றைய தினம் நெவில் பெர்னாண்டோ வைத்தியாலையில் ஒப்படைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
நாட்டில் பரவும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினால் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் நோயாளிகளின் அருகில் செல்லாமல் அவர்களுக்கு அவசியமான சிகிச்சையை தூர கட்டுப்பாட்டில் இருந்து வழங்குவதற்காக இந்த Medimate என்ற இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக இந்த இயந்திரம் மூலம் நோயாளிகளுக்கு அருகில் வைத்தியர்கள் செல்லாமல், அவர்களின் நோய் தொடர்பில் அவர்களிடம் கலந்துரையாடுவதற்கும், நோயாளிகளுக்கு அவசியமான மருந்துகளை வழங்குவதற்கும், அவர்களுக்கு உணவு மற்றும் நீர் உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த முடியும்.
இதன்மூலம் வைத்தியர் குழுவிற்கு எவ்வித கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த இயந்திரம் உதவும் என குறிப்பிடப்படுகிறது.






Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |