Home » » ஒருவரில் இருந்து 406பேருக்கு கொரோனா தொற்று பரவும் .

ஒருவரில் இருந்து 406பேருக்கு கொரோனா தொற்று பரவும் .

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில், ஒருவரில் இருந்து 406பேருக்கு கொரோனா தொற்று பரவும் என்று முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. அதுகுறித்து பகிர்ந்துள்ள சுகாதார அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி லாவ் அகார்வால் “நோய் பரவுதலைத் தவிர்க்க தனி மனித இடைவெளி முக்கியமானது. நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா தொற்று உள்ள ஒரு நபர், 30 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை பின்பற்றாவிட்டால் அவர் 406 நபர்களுக்கு அந்த நோயை பரப்பிவிடுவார்.
எந்தவொரு நோய் பாதிப்புமே, ஆர் நாட் எனப்படும் ஓர் அளவுகோலை வைத்துத்தான் அதன் பரவும்தன்மை கணக்கிடப்படும். அந்த வகையில், கோவிட் – 19 கொரோனா வைரஸின் ஆர்.நாட் அளவு 1.5 முதல் 4 வரை இருக்கிறது.
அதாவது R0 மதிப்பென்பது 2.5 என எடுத்துக்கொண்டால், கொரோனா தொற்று கொண்ட ஒரு நபர் 30 நாள்களில் 406 நபர்களுக்குத் தொற்றைப் பரப்புவார்.
சிறந்த தடுப்பு நடவடிக்கைகளின் மூலம், நோய்த்தொற்றின் வீரியத்தை ஒரே காலகட்டத்தில் ஒரு நோயாளிக்குச் சராசரியாக இரண்டரை நபர்களாகக் குறைக்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், தனிமைப்படுத்துதலும் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும். அதனால், மக்கள் அவற்றைப் பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |