தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தினரை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்துவதற்கான காலம் மேலும் ஒரு மாத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாளை இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில், நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாருக்கு தேவையான உதவிகளையும் செய்துவருகின்றனர்.
இதனையடுத்து முன்னதாக வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானியின் கால எல்லை முடிவடைவதனையடுத்தே அந்த கால எல்லையை நீட்டிக்கும் முகமாக ஜனாதிபதி மீண்டும் வர்த்தமானியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: