Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அழகிய பூங்காக்களில் சடலங்களை புதைக்கும் அவல நிலைக்குள் அமெரிக்கா! தவிக்கும் உலக வல்லரசு

உலக வல்லரசான அமெரிக்காவில் சடலங்கை அழகிய பூங்காக்களில் புதைக்கும் அவல நிலை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகின்ற நிலையில், நியூயோர்க்கில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு சடலங்களை புதைக்க கூட இடம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பொதுப் பூங்காக்களை கல்லறைகளாக மாற்ற யோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் இதுவரை 560,433 பேர் பாதிக்கப்பட்டும், 22,115 பேர் பலியாகியும் உள்ளனர். இதிலும், உலகிலேயே மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக நியூயோர்க் உருவெடுத்து உள்ளது.

இந்நிலையில் நியூயோர்க் மாகாணத்தில் கொரோனாவினால் பலர் பலியாகி வருவதால் அங்கு சடலங்களை புதைக்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சராசரியாக 800 பேர் வீதமானோர் பலியாகிறார்கள். அங்குள்ள பெரிய கல்லறைகள் எல்லாம் இப்போதே சடலங்களை புதைக்க இடம் இன்றி காணப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, ஏற்கனவே 2 ஆயிரம் பேருக்கும் அதிகமான உடலை வைத்தியசாலையில் ஐஸ் பெட்டிகளுக்கு வைத்து உள்ளனர். வெளியே புதைக்க இடம் இல்லாத காரணத்தால் இந்த உடல்களை புதைக்காமல் வைத்து இருக்கிறார்கள்.
நியூயோர்க்கில் சடலங்களை புதைக்க இடம் இல்லாத காரணத்தால் அங்கு அருகே இருக்கும் மாகாணங்களில் உடல்களை புதைக்க திட்டமிட்டு வருகிறார்கள்.
இதேவேளை, நியூயோர்கிலுள்ள பெரிய மற்றும் சிறிய கல்லறைகள் அனைத்திற்கும் தினமும் 80-90 சடலங்கள் வருவதாக அங்கு பணியாற்றும் நபர்கள் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்காவின் இந்த அவல நிலைக்கு அதிபர் ட்ரம்பின் அசட்டையீனமே காரணம் என தற்போது அந்நாட்டு ஊடகங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments