Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கன் எயார்லைன் விமான நிறுவனம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றன.
அதேபோன்று ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனமும் தற்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கத் தொடங்கியிருப்பதாக அந்நிறுவனத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, ஸ்ரீ லங்கன் விமான சேவை தனது ஊழியர்களுக்கு வேதனமற்ற கட்டாய விடுமுறையை வழங்கி செலவீனங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளை நிறுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவை பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் 3 மாதங்களுக்கு நூற்றுக்கு 25 வீதம் கட்டாய வேதன கழிவினை மேற்கொள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படவிருந்த அனைத்து வேதன உயர்வுகளும் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments