முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதினின் சகோதரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிசாத் பதியூதினின் சகோதரரான ரியாத் பதியூதின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை 8.45 முதல் 9.30 வரையான காலப்பகுதியில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் ஆகிய தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அத்துடன் கொழும்பு சங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் கொள்ளுப்பிட்டிய சினமன் கிரேன்ட் ஆகிய விருந்தகங்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதல்கள் காரணமாக 359 பேர் பலியானதாக கூறப்பட்ட போதும் 253 பேர் மாத்திரமே பலியானதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் அன்றைய அரசாங்கம் விசாரணை குழு ஒனறை அமைத்திருந்ததுடன், பலரிடம் விசாரணைக முன்னெடுத்திருந்தது.
பல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரிசாத் பதியூதினின் சகோதரரான ரியாத் பதியூதின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments: