Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரித்தானியாவில் 7,000 முதல் 20,000 வரையிலான மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு! பேராசிரியர் நீல் பெர்குசன்


கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் உயிரிழப்புக்களும் தொற்றுநோயாளார்களின் எண்ணிக்கையும் மிகமிக வேகமாக அதிகரித்து வருகிறது.
7,000 முதல் 20,000 பிரிட்டிஸ் மக்கள் வரை இறப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக பேராசிரியர் நீல் பெர்குசன் (Professor Neil Ferguson) கணித்துள்ளார்.
பிரித்தானியாவில் கோவிட் -19 காரணமாக ‘20, 000க்கும் அல்லது அதற்கும் குறைவான ’மக்கள் இறந்துவிடுவார்கள் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பில் பிரித்தானியாவின் தொற்றுநோயியல் நிபுணரும் நுண் உயிரியல் பேராசிரியருமான பேராசிரியர் நீல் பெர்குசன் (Professor Neil Ferguson) அவர்கள் எதிர்வு கூறியுள்ளார்.
இருப்பினும் தொற்று நோய்கள் பரவுகையை கணிப்பது மிகவும் கடினம் எனவும் அவர் எச்சரிக்கையுடனான ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கோவிட் -19 காரணமாக இன்று வரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் சர்வதேச ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போது பிரித்தானியாவின் முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் எனக் கேட்டதற்கு பதில் அளித்த பேராசிரியர் நீல் பெர்குசன் (Professor Neil Ferguson) கொரோனா வைரஸ் தொற்றுப் பேரவலத்தின் தன்மைகளைப் பொறுத்தே பிரித்தானிய முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் எனக் கூறமுடியும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன் சமூகரீதியான தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஒரு திகதியை, குறிப்பிட மறுத்த பேராசிரியர், பொருத்தமான நேரத்தில், பொருத்தமான மாற்று ஏற்பாடுகளுடன் அவை மாற்றி அமைக்கப்படும் எனவும், குறிப்பாக வெகுஜன சோதனை போன்றவை இதில் அடங்கும் எனவும் பேராசிரியர் நீல் பெர்குசன் (Professor Neil Ferguson) தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments