Home » » 520 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவுக்கு ஏற்படவுள்ள மற்றுமொரு துயரம்

520 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவுக்கு ஏற்படவுள்ள மற்றுமொரு துயரம்

கொரோனா வைரஸால் துவண்டு போயுள்ள அமெரிக்காவின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் வறட்சி ஏற்பட உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி முடிவானது சயன்ஸ் சஞ்சிகையில் வெளியாகி உள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஏற்படவுள்ள இந்த வறட்சியானது அமெரிக்காவின் மேற்கு பகுதியைத் தாக்க இருக்கிறது. இந்த பெரும் வறட்சி இயற்கையான தொடர் நிகழ்வென்றும், இது 2000ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டதென்றும், காலநிலை மாற்றம் இதனைத் துரிதப்படுத்துகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் இதற்கு முன்பு 40 முறை வறட்சி ஏற்பட்டதாகவும், அதில் 4 வறட்சிகள் பெரும் வறட்சி என்றும் கூறும் ஆராய்ச்சியாளர்கள். இவை 800, 1100, 1200 மற்றும் 1500 ஆகிய காலகட்டங்களில் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.
இதன் காரணமாக மிக மோசமான அளவிற்குக் காட்டுத்தீ அதிகரிக்குமென்றும், முக்கிய நீர் நிலைகளான பொவெல் ஏரி மற்றும் மேட் ஏரி வற்றும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |