கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் பெண் ஒருவரும் அவரது மகனும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர்கள் குறித்து பல விடயங்கள் வெளிவந்துள்ளன.
குறித்த பெண்ணுக்கு எவ்வாறு இந்த நோய் தொற்றியது தொடர்பிலும், குறித்த பெண்ணின் மகனால் பார்மசி ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டமை தொடர்பிலும் தகவல்கள் வெளிவந்துள்ள.
இது தொடர்பான விரிவான தகவல்கள்..
கொட்டாஞ்சேனை - பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் முத்த மகனுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
எனினும் 2 ஆம் மகனுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ள நிலையில் விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன
குறிப்பாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என ஆராய்ந்துவரும் சுகாதாரத் துறை அவருக்கு இந்தியா யாத்திரை செல்லும் போது விமானத்தில் வைத்து கொரோனா தொற்றியிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
குறிப்பாக யாத்திரை செல்லும் போது விமானத்தில் அவருக்கு அருகே இருந்த ஆசனத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் இருந்ததாகவும், அவர் அடிக்கடி இருமிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தாக்கம் இருந்து அதனூடாக இந்த பெண்ணுக்கு தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அப்பெண்ணுக்கு கடந்த மார்ச் 27 ஆம் திகதியே இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் காட்டியுள்ள போதும் அவர், தனக்கு ஆஸ்துமா இருப்பதால் அதனை அவ்வளவு பாரதூரமாக எடுத்துக்கொள்ளவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பின்னணியில் நேற்று அப்பெண்ணின் 2 ஆம் மகனுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.
இந்த நிலையில், அவரால் கொஹுவலை - சரணங்கர வீதியில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு விற்பனைக்காக கையளிக்கப்பட்ட ஒரு தொகை முகக் கவசங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றை பொலிஸார் நேற்று தீயிட்டு அழித்துள்ளதுடன், அந்த பாமசிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி குறித்த நபரால் 550 முகக் கவசங்கள் விற்பனைக்காக அந்த பாமசிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எதுவும் இன்று வரை விற்பனை செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இந் நிலையில் அந்த பாமசியின் உரிமையாளரும் இரு உதவியாளர்களும் நேற்று முதல் வெள்ளவத்தை மற்றும் களுபோவில பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
0 comments: