Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வலயக் கல்வி நடவடிக்கைகள் 'கொவிட்'-19 அனைத்து விஞ்ஞான செயற்படுகளுக்கும் முரணானது இலங்கை ஆசிரியர் சங்கம்



'கொவிட்'-19 கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாட்டில் ஒரு அபாய நிலையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் வேளையில் சனாதிபதிச் செயலனி கல்வியமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் அமைச்சு, சிறுவர் அதிகார சபை, சமூக வைத்திய நிபுணர்கள் மற்றும் சமூகவியலாளர்களின் அறிவுறுத்தல்களுக்கு முரணாக மட்டக்களப் கல்விவலய அதிகாரிகள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒன்று கூடல்களை ஒழுங்கு செய்வதை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு செயலாளர் பொன்னுத்துறை உதயரூபன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
.


நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் திறக்கப்படுவதற்கு முன் தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை மீறி வலயத்தில் உள்ள சில பாடசாலைகள் திறக்கப்பட்டு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு விண்ணப்;பப்படிவங்கள் வழங்கப்பட்டமை கடும் மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொழில் வாழ்வாதாரம் அற்ற வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களின் சம வாய்ப்பு கல்வியுரிமை பற்றிக்கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இதேவேளை அதிபர்கள், ஆசிரியர்கள் ஒன்று கூடலின் போது சமூ இடைவெளி கட்டுப்பாடுகள் பேணப்படல் வேண்டும். இவற்றினை கருத்திற் கொள்ளாத வலய அதிகாரிகள் அதிபர்கள், அசிரியர்களுடன் கலந்து அலோசனைகள் செய்யாமல் பணிப்புரைகளை வழங்குவதை சங்கம் வன்மையாக கண்டிப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள வாகனங்கள் தொற்று நீக்கம் செய்யப்படாமலும் வலயப்பணிமனை நோய்த்தடுப்பு தொற்று நீக்கம் செய்யப்படாமலும் அதிபர்களுக்கான கூட்டங்கள் நடாத்தப்படுவதினையும், பாதுக்கப்பான முறையில் வியாபாரம் செய்யப்படாமல் கொள்வனவு செய்யப்பட்ட மொபையில் பயன்பாடு தொடர்பாக மாணவர்கள் தொடர்பாகவும் வலயக்கல்வி அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments