
மட்டக்களப்பினை சேர்ந்த குறித்த நபர் பிரித்தானியாவில் இருந்து வந்து மட்டக்களப்பு நகர் பகுதியில் தங்கியிருந்து சில பகுதிகளுக்கு பிரயாணங்களை மேற்கொண்டிருந்தார்.
தாமாக வைத்தியசாலைக்குச் சென்று பின்னர் நோய் தொற்று இனங்காணப்பட்ட அன்றே அவர் கொழும்பு தேசிய நோய்தொற்று வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று(03) பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை அழைத்து வருவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து அம்பியூலன்ஸ் வண்டி இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்ககள் தெரிவிக்கின்றன.
தற்போது தனது வீட்டுக்கு பூரண சுகத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். இவரைப் பற்றி பல தவறான செய்திகளை வெளியிட்டவர்களுக்கு இது சமர்ப்பணம்
0 Comments