Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 902ஆக உயர்வு!!!!


பொலிஸ் ஊடரங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் நேற்று (06)காலை 6 மணி முதல் இன்று (07) காலை 6 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியினுள் ஆயிரத்து 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன்,இக்காலப்பகுதியில் 326 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 15 ஆயிரத்து 902 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 3 ஆயிரத்து 991 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments