Home » » கொரோனாவால் பலியான 13 வயது சிறுவனின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட துயரம்! பரிதவிக்கும் பெற்றோர்

கொரோனாவால் பலியான 13 வயது சிறுவனின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட துயரம்! பரிதவிக்கும் பெற்றோர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உறவுகளை சிதைத்து தனிமைப்படுத்தியிருக்கிறது. இறுதிக் கிரியைகளின் போது கூட எவரும் இல்லாமல் நடத்தப்படும் துயரங்களும் அங்கங்கே நடந்து கொண்டிருக்கிறது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 13 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், இறுதிச் சடங்கு பெற்றோர் கூட கலந்து கொள்ளாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் குறைந்த வயதில் உயிரிழந்த சிறுவன் Ismail Mohamed Abdulwahab. 13 வயதான தெற்கு லண்டனின் Brixton பகுதியை சேர்ந்தவன்.
கடந்த வெள்ளிக் கிழமை உடல்நிலை சரியில்லாமல் King’s College மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அதில் அவனுக்கு கொரோனா வைரஸ் உறுதியானதையடுத்து, கடந்த புதன் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதன் காரணமாக அவனின் குடும்பத்தினர் பெற்றோர் மற்றும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சிறுவனின் இறுதிச்சடங்கு Brixton-ல் இன்று நடைபெற்றது. இதில் அவனின் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இதை எல்லாம் குடும்ப நண்பர் Mark Stephenson என்பவர் முன்னின்று செய்துள்ளார்.
இறுதிச் சடங்கின் நேரடி ஒளிபரப்பை அவரது தாய் மற்றும் உடன்பிறப்புகளுக்கு அனுப்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் அவர்களால் நேரில் வரமுடியாது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது மிகவும் வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் Mark Stephenson, இறுதி சடங்கின் செலவுக்காகவும், Ismail Mohamed Abdulwahab தந்தை புற்றுநோயால் இழந்த குடும்பத்துக்காகவும் பணம் திரட்டுவதற்காக GoFundMe பக்கத்தை அமைத்தார்.
அதில், நேற்றுக் காலை வரை, 67,000 பவுண்ட்டிற்கும், அதிகமாக நிதி திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |