Home » » அச்சுறுத்தும் கொரோனா - யாழ்ப்பாணம் உட்பட 12 பிரதேசங்கள் முற்றாக முடக்கம்

அச்சுறுத்தும் கொரோனா - யாழ்ப்பாணம் உட்பட 12 பிரதேசங்கள் முற்றாக முடக்கம்

ஸ்ரீலங்காவில் இதுவரை கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட, பரவல் அதிகமுள்ள 12 பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தின் அரியாலை - தாவடி பகுதியும், களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம மற்றும் பேருவளையின் சில பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியின் ஒரு பகுதி, கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை - போரத்தொட்டை.
கொழும்பு மாவட்டத்தின் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, ரத்மலானை - அர் ஜனமாவத்தை, குருணாகல் மாவட்டத்தின் - கட்டுபொத்தை - கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதி, மத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ - அக்குரஸ்ஸ – மாலிதுவ -கொஹூகொட பகுதி ஆகியனவே இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் அத்திட்டிய, ரத்மலானை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுகாதார அதிகாரிகளின் கணிப்பீட்டின் படி ரத்மலானை ஸ்ரீ ஜனமக மாவத்தை முற்றாக முடக்கப்பட்டதாக இரத்மலானை மருத்துவ அதிகாரி ஜே.எம்.குணதிலக தெரிவித்தார்.
அத்துடன் வெல்லம்பிட்டிய, அத்திடிய பகுதிகளிலும் தேவையாவ பாதுகாப்பு வழி முறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் புதிதாக முடக்கப்பட்ட பகுதிகளில் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ - அக்குரஸ்ஸ, மாலிதுவ -கொஹூகொட பகுதியும் நேற்று முன்தினம் இணைந்தது.
அப்பகுதியில், ஏற்கனவே தனிமைப்படுத்தலுக்கு உள்ளான ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அப்பகுதி முற்றாக முடக்கப்பட்டது.
இன்றைய தினம் மாத்தறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும், இந்த பகுதி தொடர்ந்தும் முடக்கத்திலேயே இருக்கும் என பொலிசார் கூறினர்.
அத்துடன் குருணாகல் மாவட்டத்தின் - கட்டுபொத்தை - கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதியிலும் இன்று தளர்த்தப்படும் ஊரடங்கின் போது எவரும் உள், வெளிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |