Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

லண்டனில் தலைதூக்கும் குடும்ப வன்முறைகள் – சராசரியாக ஒரு நாளுக்கு 100 பேர் கைது

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இங்கிலாந்து நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக குடும்ப வன்முறை சம்பங்கள் அதிகரித்து உள்ளன.லண்டன் நகர் முழுவதும், கடந்த ஏப்ரல் 19ந்தேதி வரை 6 வாரங்களில், ஒரு நாளுக்கு சராசரியாக 100 என்ற எண்ணிக்கையுடன் 4 ஆயிரத்து 93 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 6 வாரங்களில் குடும்ப வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய புகார் பற்றிய அழைப்புகள் 3 பங்கு அதிகரித்து உள்ளன என்று லண்டன் பெருநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அந்நாட்டில், கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட நபர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டனர். இதனால், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்பொழுது, கடந்த மார்ச் 9ந்தேதியில் இருந்து இதுவரை, புகார்கள் 24 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளன.இவற்றில் குடும்ப விவகாரங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் பற்றிய புகார்கள் கடந்த வருடத்தில் இருந்து 3 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளன. இவை குற்ற வழக்குகளாக பதிவு செய்யப்படுவதில்லை. எனினும், இந்த புகார் எண்ணிக்கை கடந்த மார்ச் 9ந்தேதியில் இருந்து ஏப்ரல் 19ந்தேதி வரையில் 9 சதவீத அளவுக்கு உயர்ந்து உள்ளது.
லண்டனில் குடும்ப சண்டையில் இரு கொலைகளும் நடந்துள்ளன. இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.(15)

Post a Comment

0 Comments