Home » » இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் பல நிவாரணங்களை அறிவித்துள்ள ஜனாதிபதி பட்டதாரிகளும் சலுகையில் உள்ளடக்கப்பட்டனர் !!!!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் பல நிவாரணங்களை அறிவித்துள்ள ஜனாதிபதி பட்டதாரிகளும் சலுகையில் உள்ளடக்கப்பட்டனர் !!!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பருப்பு மற்றும் டின்மீன் என்பவற்றை குறைந்த விலையில் கொள்வனவு செய்யலாம் என்ற நிவாரண திட்டத்தை கோட்டாபய அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று முதல் அமுலாகும் வகையில் வெட் வரி மற்றும் வருமான வரி, சாரதி அனுமதிப்பத்திரம், புதுப்பித்தல் கட்டணங்கள், 15ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த மின்சார, நீர்க்கட்டணங்கள், 50ஆயிரத்துக்கும் உட்பட்ட கடன் அட்டை கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான கால எல்லை 2020 ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகளுக்கான லீசிங் கொடுப்பனவுகளுக்கு 6 மாத அவகாச காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 இலட்சத்துக்கும் குறைவான வங்கி மற்றும் நிதி நிறுவனக் கடன்களுக்கான மீள்கொடுப்பனவுகளுக்கு மூன்று மாத காலம் அவகாச காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கான மார்ச் மாத 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வங்கியில் வைப்பிலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் இன்று அமைச்சுகளின் செயலாளர்கள், வங்கிகளின் செயலாளர்கள், லீசிங் (குத்தகை நிறுவன) அதிகாரிகள் ஆகியோருடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பின்போது எடுக்கப்பட்டுள்ளன.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |