Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் உள்ள பிரித்தானிய பிரஜைகளுக்கு அவசர அழைப்பு

இலங்கையில் தங்கியுள்ள பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் நாடு திரும்ப வேண்டும் என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வணிக விமானங்கள் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கான பயணங்களை தொடர்ந்தும் மேற்கொள்கின்ற நிலையில் அவற்றின் மூலம் தமது பிரஜைகள் நாடு திரும்பமுடியும் என்று உயர்ஸ்தானிகரம் கோரியுள்ளது
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவிக்கையில்,
நாளை லண்டன் செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் 100க்கும் அதிகமான ஆசனங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை அவசியம் ஏற்பட்டால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான வீசாக்களை ஏப்ரல் 12 வரை நீடிக்கமுடியும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமையையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு சென்று கடவுச்சீட்டுக்களை உறுதிப்படுத்திய பின்னர் விமான நிலையத்துக்கு செல்லமுடியும் என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments