Advertisement

Responsive Advertisement

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்பு! உலக வங்கியின் எச்சரிக்கை

புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதுடன் இந்த வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள மரணங்கள் 37 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
சீனாவின் ஹூஹான் நகரில் பரவி கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது.
இன்று அதிகாலை வரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7 லட்சத்து 85 ஆயிரத்து 807 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
37 ஆயிரத்து 830 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments