Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது! சற்று முன்னர் வெளியானது தகவல்

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, இதுவரை 120 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் தற்போது வரை குணமடைந்துள்ளனர். எனினும் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து நம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடும் சுகாதார தன்மையோடும் இருக்குமாறு சுகாதார அமைப்பும் அமைச்சும் கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோன்று, அரசாங்கம் கொடுத்தும் அறிவுரைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments