Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் வயற்காவல் பணியில் ஈடுபட்ட நபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு ! காவல் துறை தீவீர விசாரணை !!!!

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் திருப்பழுகாம ம் காலபோக வயல் காவல் பணி புரிந்த ஒருவர் காவல் குடிசையில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் வயல் காவல் அதிகாரியான சண்முகம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவருடன் குடிசையில் தங்கியிருந்தவர்கள் நேற்றிரவு 12 மணியளவில் சென்றுவிட்ட நிலையில், அவர் மட்டுமே குடிசையில் தனித்து உறங்கிக் கொண்டிருந்த இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தீ தற்செயலாக பரவியதா, திட்டமிட்ட செயலா என்பது குறித்து
களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இவர் உறங்கிய பறண்(குடுசை) தென்னை ஒலை யால் மேயப்பட்டுள்ளது பக்கத்தில் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் நீர் பாச்சும் போது மின் ஒழுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும், நுளம்புக்காக பக்கத்தில் நெருப்பு புகையை வைத்து உறங்கியபோது அது தவறுதலாக குடிசையில் தீ பிடித்திருக்கலாம் எனவும் சந்தேகம் உண்டு.
எது எப்படியாயினும் பொலிசாரின் விசாரணைக்கு பின்பே காரணம் என்ன என்பதை அறியலாம் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments