Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் உரிமம் இரத்து-முதல்வர் சரவணபவன்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களில் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை
செய்யப்படுவதாக பொதுமக்கள் மாநகர சபைக்கு முறையிட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு
மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் வர்த்தகர்களுக்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும்
செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் அன்றாடம் பாவனை
செய்யும் பொருட்களின் விலையினை அரசாங்கம் குறைத்துள்ள நிலையிலும் வர்த்தகர்கள் அதிக விலை
 வைத்து நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்ததை
தொடர்ந்து, இதனை முழுமையாக கண்டிப்பதுடன். அதிக விலை வைத்து பொருட்களை விற்பனை
செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் மட்டக்களப்பு மாநகர சபையானது நுகர்வோர் அதிகார சபையுடன் இணைத்து இன்று
வர்த்தக நிலையங்ககளுக்கு களவிஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன், அதிக விலை வைத்து
பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என
தெரிவித்தார்.அத்துடன் பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது அதிக விலை
கண்டறியப்பட்டால் உடனே அறியத்தருமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments