Advertisement

Responsive Advertisement

நாளைய தினமே இறுதி நாள்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்குள் வந்தவர்கள் தங்கள் விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய மற்றொரு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மேலும் அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், அவ்வாறு பதிவு செய்வதற்கான கால எல்லை ஏப்ரல் 1 ஆம் திகதி நண்பகல் வரை மட்டுமே என்றும் அவர்கள் தங்களை பொலிஸில் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மார்ச் 16 ஆம் திகதிக்கு முதல் நாட்டுக்குள் வந்தவர்களின் பட்டியல் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே நாளைய தினம் மதியம் 12.00 மணிக்கு முன்னர் பதிவு செய்யப்படவில்லையாயின் 12 மணிக்குப் பின்னர், பொலிசார் சந்தேக நபர்களை பதிவேட்டின் படி தேடி அவர்களை கைது செய்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள்.
இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments