Home » » மட்டக்களப்பில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர் தொடர்பாக நடந்தது என்ன? யார் இந்த கந்தசாமி இராஜதுரை !!!!!

மட்டக்களப்பில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர் தொடர்பாக நடந்தது என்ன? யார் இந்த கந்தசாமி இராஜதுரை !!!!!

மட்டக்களப்பு  குருக்கள்மடத்தைச் சேர்ந்த இவர் கந்தசாமி  கண்ணம்மைக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். இரது குடும்பம் ஆரம்ப நிலையில்  சாதாரண தரக் குடும்பமாக இருந்து.  படிப்படியாக  முன்னேறியவர்.  இவருடைய தந்தை ஒரு முயற்சி நிறைந்த விவசாயி இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  கலைப்பட்டத்தைப் (B.A) பெற்றவர். அந்தவேளையில் இவருகக்கு பல நண்பர்களின்  தொடர்பு இருந்தது.  அவ்வாறான ஒருவர்தான் மதிப்புக்குரிய உதயகுமார் என்பவர். இலங்கையில் ஏற்பட்ட கலவரதின் (80 - 90) பொருட்டு இலங்கையில் இருப்பது  பயங்கரமான காலகட்டத்தில் கஸ்டத்தில் மத்தியில் பிரித்தானியா சென்றவர். அங்கு இவர் முயற்சியின் மூலம் படிப்படியாக முன்னேறியவர். சமூகத் தொண்டு இவரோடு கூடப்பிறந்தது எனலாம். இவர் தனது வருமானத்தில்  சமூகசேவைக்காக குறிப்பிட்டட நிதியினை எப்பொழுதும் ஒதுக்குபவர்.  இவரிடம் உள்ள சிறப்பு என்னவென்றால் மிக எளிமையாக எல்லோரிடமும்  பழகும் தன்மையாகும்.  இன்றைய காலகட்டத்தில் லண்டன் என்றால் மிக ஆடம்பரமாக கதைப்பார்கள் அவர்களுடைய அலங்காரங்களிலும் அது  தெரியும். ஆனால் இவர் அவ்வாறில்லை சாதாரணமானவர். இவர் லண்டனில் இருந்து கொண்டு மட்டு அம்பாறை மாவட்ட மக்களுக்கு பல சமூகப்பணிகளைச் செய்தவர் என்றால் அது மிகையாகாது. 2004 சுனாமியால் மக்கள் பாதிக்கப்பட்ட வேளையில் தானாக முன்வந்து பல மக்களுக்கு உதவிகளைச் செய்தவர். பல ஆலய கட்டிட நிர்மானிப்புக்களுக்கும் பல உதவிகளைச் செய்தவர். பாடசாலை மாணவர்களுக்கு கற்றலுக்குத் தேவையளான உதவிகளைச் செய்தவர். சாதனைபடைத்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில் தனது உதவிகளைளைச் செய்தவர். வறிய குடும்பங்களுக்கும் தன்னாலான பல உதவிகளைச் செய்தவர். இவரின் சமூகப் பணியில் மிக முக்கியம் வாய்ந்ததாக "மட்டு அம்பாறை மாவட்ட விபுலாநந்தர் முதியோர் பராமரிப்பு இல்லம்" என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இல்லமானது மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயனார் கோயிலுக்கு அருகில் உள்ளது. அங்கு அமைக்கப்பட்ட இல்லத்திற்கு அவரது குடும்பம் சார்பில் நிலத்தை எந்தவித பணமும் வாங்காமல் அன்பளிப்புச் செய்தவர். அடுத்து விபுலாநந்தர் முதி யோர் பராமரிப்பு இல்லம் இவரது சிந்தனையில் அங்கே தோற்றம் பெற்றது என்பதையும் இவ்வேளையில் கூறுவது சாலச்சிறந்ததாகும் .  இந்த நிலையம் அமைப்பதற்கு தேவையான நிதியினை திரட்டுவதற்கு  ADVRO என்னும் அமைப்பினை லண்டனில் உருவாக்கி  தனது குழுவினரோடு அங்கே பணத்தைத் திரட்டி இவரும் தன்னாலான பங்கினையும் இந்த நிலையத்துக்கு வழங்கி முதியோர் இல்லம் அமைக்க அரும்பாடுபட்டவர். இதனால் பலர் இன்றும் நன்மைபெற்றுக் கொண்டிருக்கிறார். இதனை நேரில் சென்று பார்வையிடலாம். இன்னும்  மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வைத்திய சேவை முதலான பலபணிகளை செய்வதற்கு தயாராக உழைத்துக் கொண்டிருக்கிறார்.  இவ்வாறான சமூகச் செயற்பாடுகள்  மனித நேயமற்ற கலியுகத்தில் யாருக்கும் வருவது மிக அரிதாகவே காணப்படுகின்றது. இவரின்  சமூக சேவைகள் இன்னும் பல உள்ளன.  அவற்றினை எழுதிக்கொண்டே போகலாம்.  இதனையும் விட இவரின் நேர்மைத்தன்மைக்கு இவரே நிகரானவர். யாரும்   பாதிக்கப்படக்கூடாது என நினைப்பவர் வன்முறையற்ற சாந்தமான அடக்கமான குணம் கொண்டவர்.  தனது குடும்பம் , உறவினர்கள்  குடும்பம் என அவர்களோடும் மிகுந்த அக்கறை கொண்டவர். இவ்வாறு இவரின் இயல்புகளை அடக்கிக் கொண்டே போகலாம்.

இவர் லண்டனில் இருந்து வரும் போது எந்தவித நோயுமின்றி ஆரோக்கியமான நிலையில்  லண்டனில் இருந்து குடும்பத்தாரின் வழியனுப்புதலோடு இலங்கைக்கு வந்தவர். வரும் போது இவருக்கு எந்த நோயும் இருக்கவில்லை. நோய்க்குரிய அறிகுறியும் இருக்கவில்லை அந்தவேளையில் இவர் இதைப்பற்றி நோய்த் தொற்று பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.  இவர் இலங்கைக்கு வரும் வேளையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இவரைத் தடுத்து இவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா ? இல்லையா? என்பதை பரிசோதிக்க வேண்டியவர்கள் யார் ? கட்டுநாயக்காவில் உள்ள அதிகாரிகளின் கடமையல்லவா ? இவர் இலங்கைக்கு பலதரப்பட்ட நோக்கத்திற்காக வந்திருக்கலாம். அது அவரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் எந்தவித நோய் தொடர்பான குணங்குறிகளும் இல்லை. அதனால் இவர் வைத்தியசாலை செல்லவில்லை. திங்கள் கிழமை இவருக்கு உடலில் ஒரு சோர்வு ஏற்பட முன் எச்சரிக்கையாக தனியார் வைத்தியசாலைக்கோ வேறுஎங்கோ செல்லாமல் நேரடியாக தானாக மட்டு வைத்தியசாலைக்குச் சென்றிருக்கிறார். இதனிடையே ஞாயிற்றுக் கிழமை முன்னாள்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க  அதிபரும் தனது பழங்கால நண்பருமான உதயருமார் அவர்களின் அழைப்பின் பேரின் மக்கள் சந்திப்புக்கு சென்றிருக்கின்றார். இதுதான் நடந்த சம்பவம்.

இவ்வாறான வேளையில் இவர் வந்து தங்கிய  உறவினர்கள்,  நண்பருக்கு, பொது மக்களுக்கு இவர் நோயைப் பரப்ப வேண்டிய எந்த அவசியமும் இல்லை.  யாரும் அவ்வாறு செய்யவும் மாட்டார்கள். இந்த கட்டுரை எழுதும் வரைக்கும் உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ நோய்க்கான அறிகுறிகள் எதுவும்  இல்லை.   இறைவன் அவருளால்  உறவினர்கள், பொது மக்கள்  எல்லோருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாமல் இருக்க இறைவனைப் பிராத்திப்போம்.

இதைவிடுத்து சந்தப்ர்ப்பம் கிடைத்து விட்டது என்று  முன்னாள் அரச தலைவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி , முரண்பாடுகள் ,  தனிப்பட்ட விரோதங்களை சாதகமாகப் பயன்படுத்தி முகநூல் நண்பர்கள்,   சமூக வலைத்தளங்கள் சில இவர்கள் மீதான பழிவாக்கல்களை மேற்கொள்கின்றன. இதனை மனித நேயமுள்ள எந்த மானிடனும் மேற்கொள்ளமாட்டான். தனிப்பட்ட விரோதங்களை இதில் சாதிக்கக்கூடாது.    இதனை அரசியலாக்குவது, சமூகத்துக் பிழையான செய்திகளைப் பரப்புவது ஏற்புடையதல்ல என்பது இதனால் உணர்த்தப்படுகிறது. முதலில் நாம் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் இந்நோயிலிருந்து குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பது சாலச்சிறந்ததாகும். இக்கட்டுரை எவருடைய மனதையும் நோகடிப்பதற்காக எழுதப்படவில்லை உண்மை நிலையினை விளக்குவதற்காக எழுதப்படுகின்றது.

இந்த நேரத்தில்  யாரெல்லாம் எவ்வகையில் விமர்சிக்கிறார்களோ அதை உரியவர் செவிமடுத்து அதை ஏற்கவில்லையோ அது திரும்பவும் விமர்சிப்பவருக்கே சென்றடைகின்றது. எனும் கருத்தினை விவேகாநந்தர் ஓரிடத்தில் கூறியுள்ளார்.


"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

எந்தவொரு பொருளறிந்து எவர் எதைச் சொன்னாலும் அதை  அப்படியே நம்பி  ஏற்றுக் கொள்ளாமல்  உண்மை எது என்பதை ஆராய்ந்து  தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

 - தகவலுக்காக -

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |