Home » » திகாமடுல்ல மாவட்டத்தில் 6 கட்சிகள், 4 சுயேட்சைக்குழுக்கள் வேட்புமனுத்தாக்கல்

திகாமடுல்ல மாவட்டத்தில் 6 கட்சிகள், 4 சுயேட்சைக்குழுக்கள் வேட்புமனுத்தாக்கல்


(பாறுக் ஷிஹான்)

ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதன்கிழமை (18) பகல் வரை 3 அரசியல் கட்சிகள் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மொத்தமாக புதன்கிழமை பகல் வரை 6 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதுடன் இதுவரை 20 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.


இன்றைய தினம் வசந்த பிரியந்த தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தொடம்பல குசலசிறி ஹிமி தலைமையிலான அபே ஜனபல பக்சய, கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையிலான தமிழரசுக்கட்சி ( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), மற்றும் இரண்டு சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களைக் கையளித்தன. நேற்றைய தினம், எச்.எம்.றுவான் குமார தலைமையிலான சிறிலங்கா சமாஜவாதிகட்சி, ஜீ.குமாரகுலசிங்கம் தலைமையிலான இலங்கை லிபரல் கட்சி, சீலரத்ன தேரர் தலைமையிலான ஜனசத பெரமுன கட்சி ஆகியனவும், கலந்தர் சாகுல் கமீட் தலைமையிலான சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. அம்பாரை மாவட்டத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 10பேர் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவிலிருந்து போட்டியிடுவர். ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு கட்டப்பணம் செலுத்தும் காலம்நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளன. வேட்பு மனுத்தாக்கல் 12ஆம் திகதிவியாழக்கிழமை ஆரம்பமாகி 19ஆம் திகதியுடன் நிறைவடையும். அம்பாரை (திகாமடுல்ல) மாவட்டத்தின் அம்பாரை, சம்மாந்துறை, கல்முனை,பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலும் 513979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.



பின்னிணைப்பு-

திகாமடுல்ல 3 கட்சிகள் 1 சுயேட்சைக்குழும் வேட்புமனுத்தாக்கல்.



நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக செவ்வாய்க்கிழமை மாலை வரை 3 அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழு ஒன்றும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதுடன்இ இதுவரை 20 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.



எச்.எம்.றுவான் குமார தலைமையிலான சிறிலங்கா சமாஜவாதி கட்சி, ஜீ.குமாரகுலசிங்கம் தலைமையிலான இலங்கை லிபரல் கட்சி, சீலரத்ன தேரர் தலைமையிலான ஜனசதபெரமுன கட்சி ஆகியனவும், கலந்தர் சாகுல் கமீட் தலைமையிலான சுயேட்சைக்குழுவுமே இன்றைய தினம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

அம்பாரை மாவட்டத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 10 பேர் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவிலிருந்து போட்டியிடுவர்.

வேட்பு மனுத்தாக்கல் 12ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 19ஆம் திகதியுடன் நிறைவடையும்.

அம்பாரை (திகாமடுல்ல) மாவட்டத்தின் அம்பாரை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலும் 513979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.




































திகாமடுல்ல மாவட்டத்தில் 6 கட்சிகள், 4 சுயேட்சைக்குழுக்கள் வேட்புமனுத்தாக்கல்

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |