Home » » சீனாவில் புதிய வகை வைரஸ் ஹண்டா தாக்கி ஒருவர் பலி.

சீனாவில் புதிய வகை வைரஸ் ஹண்டா தாக்கி ஒருவர் பலி.


Hantavirus; கொரோனாவை தொடர்ந்து சீனாவில் புதிய ஹண்டா வைரஸ். இது மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவாது என்பது சற்று ஆறுதலான விஷயம்.
சீனா கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒருவர் ஹண்டா வைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மொத்த உலகமுமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. உலகம் முழுவதும் 400000 வரை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது சீனாவில் மேலும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. அவர் பேருந்தில் வந்துகொண்டிருக்கும் பொழுது உயிரழந்ததால் வந்த பேருந்தில் இருந்த மற்றவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
எலிகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது இந்த வைரஸ். இந்த வைரஸ் தற்பொழுது பிரான்சிலும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
Hantavirus Symptoms; ஹண்டா வைரஸ் அறிகுறிகள் மற்றும் பரவும் விதம்
எலிகளை தாக்கும் இந்த வைரஸ் பிற விலங்குகளை தாக்காது. மனிதர்களை மட்டும் தாக்கும் தன்மை உடையது. இதன் அறிகுறி தலைவலி, காய்ச்சல், வயிற்று போக்கு மட்டும் வாந்தி ஆகியவை
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஹாண்டா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. இருந்தாலும் சீனாவுக்கு இது இன்னொரு தலைவலியாக உள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |