Home » » கிழக்கில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்!கேட்டுப்படுத்த முடியாது திணறும் இராணுவமும் பொலிஸாரும்!

கிழக்கில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்!கேட்டுப்படுத்த முடியாது திணறும் இராணுவமும் பொலிஸாரும்!

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு இன்று காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கல்முனை, சாய்ந்தமருது ,மத்திய முகாம், கல்முனை ,மருதமுனை ,சம்மாந்துறை, அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பொருட்களை கொள்வனவு செய் அதிகளவு பொதுமக்கள் முண்டியடிப்பதை காணமுடிந்தது.
கல்முனை பொதுச் சந்தை , சதோச போன்ற இடங்களில் பெருமளவு வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்துவருகின்றனர். பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதோடு மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றா என்பதையும் அவதானித்து வருகின்றனர். பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் வீதி வீதியாக மக்களை தெளிவுபடுத்தும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர் .
அரசாங்கம் ஏற்கனவே அறிவுறுத்தியபடி உரிய சுகாதார முறைப்படி முகவசம் அணியாமல் வருகை தந்வர்கள் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்யும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கப்பட்டனர்.
பொருட்கள் கொள்வனவு செய்ய கட்டுக்கடங்காமல் கூடிவரும் மக்களிடையே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், கல்முனை மாநகர சபை , கல்முனை பிராந்திய பொலிஸார் , இராணுவத்தினரும் இணைந்து மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தி வருகின்ற போதிலும் குவியும் சனக்கூட்டத்தை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.
மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்ததற்காக கூடியிருந்தவர்கள் அங்கிருந்து பொலிஸாரினால் அகற்றப்பட்டு வருகின்றனர்.











Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |