Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க் செல்வந்தர் இரட்டிப்பு மகிழ்ச்சியில்

இலங்கையில் கடந்தவருடம் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதலில் தனது மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க்க செல்வந்தர் ஹோல்ச் பொவ்ல்சன் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
ஆம் அவரின் மனைவி கடந்த புதன்கிழமை இரட்டை பெண்குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
"இரண்டு சிறிய அற்புதங்கள்" என்று தம்பதியினரால் விபரிக்கப்பட்ட இரட்டையர்கள் - இன்று டென்மார்க்கிற்கு வந்தனர்.
அவர்களின் தனிப்பட்ட செயலாளர் கிறிஸ்டின் மன்ஸ்டர் வெளியிட்ட அறிக்கையில் “2020 மார்ச் 11 புதன்கிழமை, அன்னே மற்றும் ஆண்டர்ஸ் ஹோல்ச் பொவ்ல்சன் ஒரு நல்ல கர்ப்பம் மற்றும் எந்தப் பிரச்சினையும் இல்லாத பிறப்புக்குப் பிறகு.ஆரோக்கியமான இரண்டு சிறுமிகளுக்கு பெற்றோரானார்கள்.

“குடும்பத்தினர் இந்த இரண்டு சிறிய அற்புதங்களையும் முழு மனதுடன் வாழ்த்துகிறார்கள். சிறுமிகளை வரவேற்பதிலும் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். ”எனத் தெரிவித்துள்ளார்.
பொவ்ல்சன் கடந்த வருடம் ஷங்கரி லா ஹோட்டலில் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு குண்டுத் தாக்குதலில் தனது நான்கு பிள்ளைகளில் மூவரை இழந்திருந்தார்.
ஹோல்ச் பொவ்ல்சன் வர்த்தக வலையமைப்பான Asos.com இன் மிகப்பெரிய பங்குதாரர் ஆவார்.
அவர் டென்மார்க்கில் உள்ள பணக்காரர்களில் ஒருவராகவும், இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் மிகப்பெரிய நில உரிமையாளராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments