Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பட்டதாரி பயிலுனர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

அம்பாறை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம் என அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர்களான வி.ஜெகதீஷன்,மற்றும் ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலுனர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் சனிக்கிழமை(28) கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கே இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தெரிவித்ததாவது
நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 3ம் கட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக தெரிவு செய்யப்பட்ட அனைவரும் எதிர்வரும் திங்கள்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகங்களிலும் வருகை தர வேண்டாம்.
அவர்கள் அனைவரும் தங்களின் கிராம சேவர்களிடம் வங்கி கணக்கு இலக்கம்,அடையாள அட்டை பிரதி,கல்விச் சான்றிதழ்களின் பிரதிகளை எடுத்து சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது சம்மந்தமான அறிவுறுத்தல்கள் அனைத்தும் அந்தந்த பிரதேச செயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது..
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments