( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில்  தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு  அண்மையில் பாடசாலை அதிபர் ஜனாப். எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ. றஹ்மான் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இம்மாணவர்களுக்கான பாடசாலை பாதணிகளை குவைத் நாட்டில் தொழில் புரியும் எமது நாட்டைச் சேர்ந்த சில சகோதரர்கள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்களான ஏ.சஹறூன், எம்.எம்.எம்.றபீக்  , அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஸி.எம்.முனாஸ்  ,ஊடகவியலாளர் ஜனாப். யு.கே.காலிதீன் உட்பட  பலரும் கலந்து சிறப்பித்தனர்.



 
 
0 Comments