Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவை ஒழிக்க பௌத்த உயர்பீடங்கள் செய்துள்ள உதவி

கொரோனாவை ஒழிப்பிற்கு அஸ்கிரிய, மல்வத்து பீடம் மற்றும் தலதா மாளிகை என்பன 2 கோடி ரூபா நிதி உதவியளித்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த போதே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில் தலதா மாளிகை ஒரு கோடி ரூபா நிதியினை அன்பளிப்பு செய்துள்ளது.
மல்வத்து மகாநாயக்க தேரர் 50 லட்சம் ரூபா நிதியினை அன்பளிப்பு செய்தார்.
அஸ்கிரிய பீடத்தின் மகா சங்கத்தினரும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு 50 லட்சம் ரூபா வழங்கியுள்ளனர்.
மற்றும் மல்வத்தை, அஸ்கிரி விகாரைகளிடமிருந்து கிடைத்த ஆசிர்வாதங்களுக்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

you may like this?

Post a Comment

0 Comments