Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணத்தில் பலருக்கு கொரோனா வாய்ப்பு உண்டு! பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இங்கு பலருக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அவர் சந்தித்த மனிதர்கள் என பலரையும் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தனது முகநூலில் கருத்துப் பதிவு செய்துள்ள பணிப்பாளர் சத்தியமூர்த்தி,
நமது பகுதியில் Corona - Covid - 19 நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதால் தொற்றுக்குள்ளான்வர்கள்பலர் எமதுபகுதியில் பலர் இருக்க வாய்ப்புண்டு.
அனைவரும் சுகாதாரத்துறையினரதும் அரசாங்கத்தினதும் செய்திகளை மிக மிக கவனமாக கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags :M       `                              

Post a Comment

0 Comments