Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா கண்காணிப்பு நிலையத்திலிருந்து அழைத்துச் சென்ற பேருந்து விபத்து!

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தினால் பரிசோதனைக்குட்பட்டு பின்னர் குணமடைந்தவர்களை அழைத்துச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் இரு இராணுவத்தினர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கண்காணிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியவர்களை மாத்தறைக்கு இரணுவத்தினர் ஏற்றிச்சென்ற போது பின்னால் வந்த மற்றுமொரு பேருந்து மோதியுள்ளது.
இதன்போது இராணுவத்தினர் இருவரும், மற்ற பேருந்தின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments