Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸஹிரியன் 90 ” மாணவர் குழுமத்தின் 30 ஆண்டுகள் நிறைவையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வு


( அஸ்ஹர் இப்றாஹிம்) 
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் க.பொ.த.சாதாரண வகுப்புகளில் கல்வி பயின்று இன்று நாட்டின் நாலா புறங்களிலும் கடல்கடந்தும் தொழில் புரிகின்ற பழைய மாணவர்களின் அமைப்பான ” ஸஹிரியன் 90 ”  மாணவர் குழுமத்தின் 30 ஆண்டுகள் நிறைவையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வு ஒலுவில் பரன் தோட்டத்தில் அமைப்பின் தலைவர் மட்டக்களப்பு ஹோமியோபதி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய  அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம்.முனீர் தலைமையில் இடம்பெற்றது.

 கல்முஐன ஸாஹிரா தேசியக் கல்லூரியன் அதிபர் எம்.ஐ.ஜாபிர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில்  ” ஸஹிரியன் 90 ” குழுமத்தைச் சேரந்த கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் மெற்றபொலிடன் கல்வி நிறுவனத்தின தவிசாளருமான கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் , கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது பிரதேச  உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் , கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி சாரிக் காரியப்பர் , வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் , சட்டவல்லுனர்கள் , பட்டதாரிகள் , வர்த்தக பிரமுகர்கள் , தொழிலதிபர்கள் , தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் , ஆசிரியர்கள் , திணைக்களங்களின் தலைவர்கள் , கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான ” ஸஹிரியன் 90 ” அமைப்பைச் சேர்ந்த பழைய மாணசர்கள் கலந்து கொண்ட  இந்த ஒன்றுகூடல் நிகழ்வினை இக்குழுமத்தைச் சேரந்த யு.எல்.எம்.அலீம் நெறிப்படுத்தியிருந்தார்.

Post a Comment

0 Comments