Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

2020ஆம் ஆண்டின் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பிற்போடப்படுமா..?



2020ஆம் ஆண்டின் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை பிற்போடுவது தொடர்பாக எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதில் சமூக ஊடகங்களில் இந்த பரீட்சை பிற்போடப்படும் என்று வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இலங்கை அரசாங்கம் மாத்திரம் அல்ல முழு உலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments