கொரோனா வைரஸை மௌலவிகள் முழு ஒத்துழைப்பை எமக்கு வழங்குவதன் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் அந்நோய்த்தாக்கத்தை அழிக்க நான் எதிர்பார்க்கின்றேன் என 24ம் படை பிரிவு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்பந்தமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கட்டிடமொன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் 24ம் பிரிவின் இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சிந்தகே கமகே கலந்து கொண்டு உரையாற்றுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கு நான் ஒவ்வொரு குடும்பங்களாக தனித்து இருப்பதது தான் வழி என்கின்ற ஆலோசனையை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
இங்கு சிலருக்கு தெரியாமல் நோயுள்ளவர்கள் அவர்களுக்கு தெரியாமலே வீடுகளுக்கு சென்று பரப்பி இருக்கிறார்கள் .எங்களுடைய கடமை கொரோனா தொற்றில் இருந்து மாவட்டத்தை காப்பாற்றுவதாகும்.

நான் நினைக்கின்றேன் மெளலவிமார்களும் பள்ளிவாசல் ஒலி பெருக்கி மூலம் இது குறித்து அறிவிப்புகளை செய்து வருகின்றார்கள்.இதனூடாக கொரோனா வைரஸை மௌலவிகள் முழு ஒத்துழைப்பை எமக்கு வழங்குவதன் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் அந்நோய்த்தாக்கத்தை அழிக்க நான் எதிர்பார்க்கின்றேன்.
நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்நோய் எமது நாட்டில் இருந்து இல்லாமல் போகும் என்று எதிர்பார்க்கின்றோம்.எனவே ஊர் என்ற அடிப்படையில் எல்லோரும் இணைந்து இந்த வைரஸை இல்லாமல் செய்ய பாடுபட வேண்டும்.
இதற்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழக்க வேண்டும்.நான் நினைகின்றேன் ஊரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் கடைகளை இப்பிராந்தியத்தில் மூடு காணப்படுவதால் கடைகளுக்கு வரும் மக்கள் வீடுகளுக்கு திருப்ப சென்றுவார்கள்.
எனவே தான் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அரசாங்கம்வழங்கும் அறிவுறுத்தல்களை முழுமையாக முறையாக பின்பற்றினால் எமது பிரதேசத்தையும் எமது நாட்டை காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் , கல்முனை,சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள், மற்றும் பொலிஸ், இராணுவ பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின்,பள்ளிவாசல்களின், பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றிருந்தனர்.



0 Comments