ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக புதியதொரு செயலியினை எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மதுகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாணவர்கள் க.பொ.தர சாதாரண தர பரீட்சைக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறைமையொன்றும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதில் உள்ள சாதக பாதக விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments