Advertisement

Responsive Advertisement

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் வொறுப்பாளர் ஆர்.சாணக்கியன் அவர்கள் கோவில் போரதீவு உதயதாரகை கலை விளையாட்டு கழகத்தினருக்கு உதைபந்தாட்ட காலணிகளை வழங்கிவைத்தார்


( அஸ்ஹர் இப்றாஹிம்)

கிராமபுற  இளைஞர்களின் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தும் வகையிலும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மேலும் வளர்க்கும் நோக்கிலும்  கோவில் போரதீவு உதயதாரகை கலை விளையாட்டு கழக உறுப்பினர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும்,தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின்  பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான ஆர்.சாணக்கியனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக   உதைபந்தாட்ட அணி வீரர்களுக்கான காலணிகளை  வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.




இந்நிழ்வில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும்,தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின்  பட்டிருப்பு தொகுதி உறுப்பினருமான ஆர்.சாணக்கியன் , கோவில் போரதீவு உதயதாரகை கலை விளையாட்டு கழக உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டர்.

Post a Comment

0 Comments