Home » » கல்முனை கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் உயர்தர பரீட்சை பெறுபேற்றிலும் விளையாட்டு துறையிலும் சாதனை

கல்முனை கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் உயர்தர பரீட்சை பெறுபேற்றிலும் விளையாட்டு துறையிலும் சாதனை

( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் உயர்தர பரீட்சை பெறுபேற்றிலும் விளையாட்டு துறையிலும் தலைநிமிர்ந்து நிற்பதற்கு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியே பிரதானமான காரணமாகவுள்ளது.
இவ்வாறு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை வலய கல்விப் பணிப்பானர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , 
ஒரு பாடசாலையினுடைய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நினைத்தால் எந்தவொரு விடயத்தையும் சிறப்பாக சாதித்து காட்டலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இக்கல்லூரியன்  இந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளை நாம் பார்க்கின்றோம்.இவ்வாறான நிகழ்வு உண்மையிலேயே எமது பிரதேசத்திலிருக்கின்ற ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்துவது என்பதும் அதனை சிறப்பாக நடாத்தி முடிப்பது என்பதும் அவ்வளவு இலகுவான விடயமாக இருப்பதில்லை.  அதற்கு பல்வேறு முயற்சிகள் தேவையாகவிருக்கும்.பல்வேறு திட்டமிடல்கள் அவசியமானதாகவிருக்கும் ,அதனை நடைமுறைப்படுத்தி செல்லுகின்றபோது ஏற்படுகின்ற சிக்கல்கள் , சிரமங்கள் , சவால்களுக்கு தீர்வுகாணவேண்டிய தேவைகள் இருக்கின்றது. இவை எல்லாவற்றையுமே மிகவும் வெற்றிகரமாக செய்து காட்டி இன்று ஒரு இல்ல விளையாட்டுப் போட்டியொன்றின் சிறந்ததொரு ஆரம்பநிகழ்வொன்றினை இங்கு நடாத்தி காட்டியிருப்பது என்பது பாராட்டத்தக்க ஒன்றாகும்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கென்று  தனியானதொரு வரலாறு இருக்கின்றது.அதற்கென்று சில பாரம்பரியங்கள் இருக்கின்றன.அதற்கென ஒரு கலாச்சாரம் இருக்கின்றது.அதனுடைய தனித்துவங்கள் இருக்கின்றன.அந்த தனிததுவங்களில் ஒன்றாக நாங்கள் இன்றைய இல்ல விளையாட்டுப் போட்டியின் ஆரம்நாள் நிகழ்வுகளை பார்க்க்கூடியதாக இருக்கின்றது.
ஒரு பாடசாலை எப்போது தன்னுடைய தனித்துவங்களை சிறப்பாக எடுத்துக் காட்டுவதற்கு முற்படுகின்றதோ தனித்துவங்களை வெவ்வேறு வகையாக வடிவங்களிலே  வெவ்வேறு வகையான பரிமானங்களிலே காட்டுவதற்கு முற்படுகின்றதோ அவ்வாறு காட்டுகின்ற பொழுதெல்லாம் அந்த பாடசாலை மற்றவர்களால் பேசப்படுகின்ற , பார்க்கப்படுகின்ற அங்கு என்ன இடம்பெறுகின்றது என்பதனை  சிந்திக்க தோன்றுகின்ற பாடசாலையாக மாற்றம்  பெற்றுள்ளது என்பது  அர்த்தமாகும்.
 
கல்முனை கல்வி வலயம் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சாதனைகளை  நிலைநாட்டி இருக்கின்றது  என்று சொன்னால் அதில் மிகப்  பெரிய பங்காளர்களாக இருப்பது கல்முனை ஸாஹிராக் கல்லூரி என்று சொல்லிக் கொள்வதிலே நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றோம். இக்கல்லூரியினுடைய பங்களிப்புத் தான் இன்று கல்முனை வலயம் கிழக்கு மாகாணத்தில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு பெரும் பங்காற்றி  நிற்கின்றது என்ற செய்தி மேலும் மகிழ்ச்சியை தருகின்றது.அது போன்றுதான் விளையாட்டு நிகழ்வுகளிலே அது சுவட்டு மைதான நிகழ்வுகளாக இருக்கலாம் அல்லது பெரு விளையாட்டு நிகழ்வாக இருக்கலாம்  எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் கல்முனை வலயம் தேசிய ரீதியல் ஒரு சாதனையை படைக்கின்றது என்று சொன்னால் அதிலும் இக்கல்லூரியின் பங்களிப்பு முக்கியமாக காணப்படும்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியை நோக்கும் போது அதனுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் , கல்வி அபிவிருத்தியாக இருக்கலாம் இணைப்பாடவிதான செயற்பாடுகளாக இருக்கலாம் , மாணவர் நலன் சார்ந்த பல்வேறு விடயங்களாக இருக்கலாம்  இவை  அனைத்திலும் முன்னணியில் திகழகின்றது.

ஒரு பாடசாலையினுடைய அதிபர்  பாடசாலை ஆசிரியர்களோடு பாடசாலை சார்ந்த சமூகத்தினரோடு எந்த அளவிற்கு சிறந்த உறவைப் பேணிக் கொள்கின்றாரோ ,   அந்த அளவிற்கு பாடசாலையை சிறந்த முறையில் கொண்டு செல்லலாம் என்பது எல்லோரும் அறிந்துள்ள ஒரு விடயமாகும்.இப்பாடசாலை அதிபர் எல்லோருடனும் நெருக்கமான உறவை பேணி வருகின்றார் என்பதற்கு இன்றைய நிகழ்வு எடுத்துக்காட்டி நிற்கின்றது.இப்பாடசாலையிலுள்ள மாணவர் நலன் கருதிய பல திட்டங்கள் எல்லாம் நிச்சயமாக கல்முனை ஸாஹிராக் கல்லூரியை எல்லோரும் பிரமித்து பார்க்கின்ற வகையில் மேலும் மாற்றமடைய செய்யும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.  ஆசிரியர்கள்,  மாணவர்கள் ,  பெற்றோரும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும்  ஒரு பாடசாலை அதிபருக்கு பக்க பலமாக தொடர்ச்சியாக இருந்தால் இக்கல்லூரி தேசிய ரீதியல் மிகவும் சிறந்த பாடசாலையாக மிளிரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

கல்முனை ஸாஹிராக் கல்லூரி கடந்த காலங்களிலே குறிப்பாக க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையாக இருக்கலாம் , க.பொ.த.உயர்தரப் பரீட்சையாக இருக்கலாம் அவற்றிலே  சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை பழ்த்து வருகின்றது.
இவ்வாறு பெருலுமைமிக்கதொரு கல்லூரி , சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள  கல்லூரி  , எதிர்காலத்தில் இக்கல்லூரியின் தேசிய மற்றும் சர்வதுச ரீதியிலான சாதனைகள் மென்மேலும் தொடர வேண்டும் சர்வதேச  ரீதியாக ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் , எடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு சவால்கள் , இவை எல்லாவற்றுக்குமே ஈடுகொடுக்கக்கூடியவர்களாக எங்களுடைய மாணவர்களை மாற்ற வேண்டிய பாரிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அந்த பொறுப்பை உணர்ந்து செயற்படுகின்ற போது நிச்சயமாக இந்த மாணவர்கள் எதிர்காலத்தினுடைய சவால்களுக்கு இலகுவாக முகம் கொடுக்ககூடியவர்களாக இருப்பார்கள் . அந்த வகையில் கல்முனை ஸாஹிரா மாணவர்கள் இன்று எல்லா விடயங்களிலுமே  அது பரீட்சையினுடைய பெறுபேறுகளாக இருக்கலாம் , விளையாட்டுப் போட்டி நிகழ்வாக இருக்கலம் தமி்த்தினப் போட்டி ,ஆங்கில தினப் போட்டி  என்று எந்த நிகழ்வாக இருந்தாலும் இக்கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டியவர்களாகவே உள்ளனர்.

ஒரு பாடசாலை எல்லா விடயங்களிலும் சாதனைகளை ஏற்படுத்திக் கொண்டு சிறப்பாக முன்னேறிச் செல்கின்றது , பாடசாலை சிறப்பாக தனது குறிக்கோளை நிறைவேற்றி வருகின்றது என்றால்.அது இலகுவாக இடம்பெறுகின்ற ஒரு காரியம் அல்ல அங்கு அதிபர் , ஆசிரியர்களின் பங்களிப்போடு சமூகத்தின் பங்களிப்பும் நிறைய கிடைக்கின்று  என்பது அர்த்தமாகும்.. கல்முனை ஸாஹிரக்கல்லூரி இன்று தேசிய ரீதியில் ஈட்டிவருகின்ற வெற்றிகள் , வளர்ச்சிகள் இன்னும் மென்மேலும் வளர்வதுடன் தற்போதய இல்ல  விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் காட்டும் திறமை மேலும் வளர்ச்சிபெற்று தேசிய  ரீதியல் சாதனை படைக்க  உதவ வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
என்று தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |