Home » » மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

கடந்த ஜனவரி 31 ஆம் திகதி தொடக்கம் 2020 பெப்ரவரி 07 ஆம் திகதி வரையில் 173 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இந்த வாரத்தில் 26 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 23 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 31 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 24 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 07 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 10 பேரும்,

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 10 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 06 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 06 பேரும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 04 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 09 பேரும், 

கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 09 பேரும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 06 பேரும் மற்றும் வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சற்று விழிப்புடன், வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் நீர் தங்கியுள்ள இடங்களை நுளம்புகள் பெருகாத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |