Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் ஸ்தம்பித்த பாடசாலைகள்! உரிமைக்கான போராட்டத்தில் அதிபர் ஆசிரியர்கள்!


(பாறுக் ஷிஹான்)
அதிபர் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் காரணமாக மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி பிரிவிற்குட்பட்ட பாடசாலையில் புதன்கிழமை(26) வழமை போன்று பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் பாடசாலையில் ஆசிரியர்கள் வருகை தாராமை காரணமாக மீண்டும் வீடுகளுக்கு திரும்பிச்சென்றனதை அவதானிக்க முடிந்தது.
மேலும் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் சுற்றறிக்கையை வெளியிடுவதற்கான அழுத்தத்தை வழங்கும் உரிமைக்கான போராட்டத்தில் நாடளாவிய ரீதியில் போராட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டமானது சுகவீன லீவுப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பள முரண்பாட்டினை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில் கூட்டிணைந்த தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








































சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி ஆசிரியர் போராட்டம் - மாணவர்கள் அவதி

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith

Post a Comment

0 Comments