Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கூட்டமைப்பும்,ரெலோவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு என்ன விலையையும் கொடுக்க தயார் என்று முழங்கினார் செல்வம் அடைக்கலநாதன்.


-நக்கீரன்


வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 50ஆவது நிறைவு விழா நிகழ்வில் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்தை தெரிவித்தார் செல்வம் அடைக்கலநாதன் அவர் தெரிவித்த கருத்துக்கு பதில் வழங்க வேண்டியதும் மக்களுக்கு உண்மை நிலையை எடுத்து சொல்லவேண்டியதும் காலத்தின் தேவையாக இருக்கின்றது எனவே அவர் தெரிவித்த கருத்தை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1.தமிழீழ விடுதலை இயக்கமோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ எமது மக்களின் உரிமைகளை யாருக்கும் அடமானம் வைக்காது

மைத்திரி-ரணில் ஆட்சி தமிழ் மக்களின் பேராதரவோடு அமைந்தது நீங்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை கடந்த ஐந்து ஆண்டு காலம் நல்லாட்சி அரசுக்கு 2021 வரை ஐநாவில் காலநீடிப்பை பெற்றுக்கொடுத்து போர்குற்றம் மனித உரிமை மீறல் பொறுப்புக் கூறலில் இருந்து சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றி போர்குற்றவாளி சவேந்திரசில்வாவை இராணுவத் தளபதியாக்கிய பெருமை கூட்டமைப்பின் பங்காளியான ரெலோ இயக்கத்தை சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன்இ கோடீஸ்வரன் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் காலநீடிப்புக்கு இட்ட கையெழுத்தும் ஒரு காரணம்.

2.எமது தலைவர்களது தியாகம் மக்களது விடுதலை என்ற இலட்சிய நோக்கத்தோடு இருந்தது. அரசாங்கத்தை அரவணைத்து போகும் சிந்தனையில் அவர்கள் இருக்கவில்லை.

ரணில்-மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஐந்து வருடம் முண்டு கொடுத்தது அரசை அரவணைத்து போகும் சிந்தனையில்லையா

3.இன்று ஊனமுற்று, இடுப்பு இயங்காமல் இராணுவத்தால் ஒடுக்கப்பட்டவர்களாக எங்களுடைய போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நல்லாட்சியின் நான்கு வரவு செலவுத்திட்டத்திலும் யுத்தம் முடிவடைந்து பத்துவருடங்கள் கடந்தும் பாதுகாப்பு தரப்பிற்கு இரட்டிப்பான நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு செல்வம் அடைக்கலநாதன் உட்பட பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கையை உயர்த்தி வரவு செலவுத்திட்டத்தை வெற்றி பெறச் செய்தீர்கள். முப்படையினாலும் கொலை செய்யப்பட்டவர்கள் ஊனமாக்கப்பட்டவர்கள் பில்லியன் கணக்கான சொத்தை இழந்தவர்களுக்கு ஏன் அரசு நிதி ஒதுக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் ஒரு நாளாவது கேள்வி கேட்டீர்களா? அல்லது மேற்குறிப்பட்ட விடயங்களுக்கு நிதி ஒதுக்கியதை தான் வரவு செலவுத்திட்டத்தை ஆதரிப்போம் என்று நிபந்தனை விதித்தீர்களா? சரணாகதி அரசியலை செய்து விட்டு இடுப்புக்கு கீழ் இயங்காமல் உள்ள போராளிகளைப் பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

4.எமது இயக்கத்தின் செயற்பாடு தொடர்ந்து வந்த அரசாங்களிற்கு எதிராகவே இருந்தது

அப்பொழுது நல்லாட்சியில் உங்கள் செயற்பாடு எதுவாக இருந்தது.

5.அன்று மகிந்த அரசாங்கம் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவுகளை பணய கைதிகளாக வைத்து வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொன்ன போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இடமளிக்கவில்லை.எதிர்த்து வாக்களித்தார்கள் அதுதான் கூட்டமைப்பு. 

நல்லாட்சியின் நான்கு வரவு செலவுத்திட்டத்திற்கும் தமிழ் மக்களை கொன்றொழித்த பாதுகாப்பு தரப்பிற்கு யுத்தகாலத்தில் ஒதுக்கிய நிதியை விட இரண்டு மடங்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு அளித்தீர்கள்.

6.இனப்பிரச்சினை தீர்வுக்காக பலவிட்டுக் கொடுப்புகளை செய்தோம். நாம் அடிவருடிகாளக அரசாங்கத்துடன் என்றும் செயற்படவில்லை.

பாராளுமன்ற குழுக்களின் பிரிதித் தலைவர் பதவி ஆளுங்கட்சிக்கு உரியது அரசுக்கு அடிவருடியாக செயற்பட்டதற்காகத்தான் உங்களுக்கு வழங்கப்பட்டது என்பதை நீங்கள் மறுப்பீர்களா? தற்போது இருக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் யாப்பை விட பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்ற மிக மோசமான அரசியல் யாப்பிற்கு நீங்கள் ஆதரவு அளித்தது அடிவருடிகளின் செயற்பாடாக தெரியவில்லையா 

7.இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை அமெரிக்கா திருப்பி அனுப்புகின்றமை எமக்கான காலம் கனிந்திருப்பதற்கான ஒரு செய்தி. 

ஐநா மனித உரிமை பேரவையில் நீங்கள் கையொப்பம் இட்டுக் கொடுத்த காலநீடிப்புத்தான் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு காரணமாக இருந்தது. அமெரிக்கா சவேந்திர சில்வாவிறகு எதிராக எடுத்த நடவடிக்கை இலங்கை அரசாங்கம் சோப உடன்படிக்கைக்கு மறுப்பு தெரிவித்தமைக்கான பதிலடி இது ஒன்றும் உங்களுடைய வீரதீர செயலால் வந்ததல்ல 

8.எமது இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுதருவதற்கான வாய்ப்புகள் இப்பொழுது கிடைத்திருக்கிறது. 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸாவை நீங்கள் சந்தித்து பாவமன்னிப்பு கேட்பதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் எந்த அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போகின்றீர்கள்.

ரெலோவின் 50வது ஆண்டு நிறைவு என்பது பச்சை பொய் தமிழ் மக்களின் பழம்பெரும் கட்சியான தமிழரசுக் கட்சி இந்த வருடம் எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியதை பின்பற்றி ரெலோ இயக்கம் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா என்று பொய்யான செய்தியை பரப்பியுள்ளது.

Post a Comment

0 Comments