மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது இலங்கை மண்ணில் விஜயம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு முன்பதாக மேற்கிந்திய அணி நேற்று கொழும்பு பி சரா மைதானத்தில் இலங்கை பதினொருவர் அணியோடு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி 2 விக்கட்டுகளால் தோல்வியை தழுவியது. இலங்கை – மேற்கிந்திய அணிகள் மோதும் 1வது ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பு எஸ்.எஸ்.ஸி கிரிக்கட் மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இந்த நிலையில் மேற்கிந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஓஷேன் தோமஸ் மேற்கிந்திய அணியின் சிறந்த வளர்ந்து வரும் பந்துவீச்சாளராக திகழ்கிறார். 23 வயதாகும் இளம் வீரரான அவர் மேற்கிந்திய அணிக்காக 20 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 27 மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் கடைசியாக அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். அதன் பிறகு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை. மேலும் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேகமாக பந்துவீசும் திறன்கொண்ட ஓஷேன் தோமஸ் ஜமைக்காவில் தனது அவ்டி காரில் சென்றுகொண்டிருந்த மற்றொரு காரின் மீது கோர விபத்து ஏற்படுத்தி உள்ளார். விபத்திற்கான சரியான காரணம் இன்னும் கிடைக்கவில்லை இருப்பினும் இந்த விபத்தில் ஓஷேன் தோமஸின் கார் தலைகீழாக கவிழ்ந்ததால் விபத்தில் சிக்கிய ஓஷேன் தோமஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

0 Comments