Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருதுக்கு கிடைத்த இரட்டை மகிழ்ச்சி : இன்றும் ஒரு தரமுயர்வு.



நூருல் ஹுதா உமர்.

பிரதேச வைத்தியசாலை தரம் B ஆக இருக்கும் சாய்ந்தமருது வைத்தியசாலையை தரம் A ஆக தரமுயர்த்தும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று 15 (சனிக்கிழமை) காலை 09.00 மணியளவில்  சாய்ந்தமருது வைத்தியசாலையில் நடைபெற்றது.

வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் முயற்சியின் காரணமாக,  முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது பதவிக் காலத்தில் முன்னெடுத்த செயற்பாடு அத்துடன் சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பெறப்பெற்றதே இந்த தரமுயர்வாகும்.

வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் திரு. மிஹ்லார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல். அலாவுதீன் பிரதம அதிதியாகவும்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

 மேலும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.வை.எம். ஹனீபா, முன்னாள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அசீம், வைத்தியர்கள், முக்கிய பிரமுகர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 


தொடர்புபட்ட செய்தி ......
( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்ட உத்தியோகபுர்வ கடிதத்தினை கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்லார் தலைமையில் இன்று ( 15 ) இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம்  மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் பயனாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை  பீ  ( ” B ” ) தரத்திலிருந்து ஏ ( ” A " ) தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் .ஜீ.சுகுணன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
பிராந்திய  சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர் டொக்டர் .எம்.சீ.எம்.மாஹீர் , பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப் , சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா , அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோஸ்தர்  எம்.சாபி , மாவட்ட மார்பு நோய் தடுப்பு வைத்திய அதிகாரி  டொக்டர் சனூஸ் காரியப்பர் , மலேரியா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.நௌஸாத் ,  அபிவிருத்தி சபை  பிரதி தலைவர் எம்.எம்.முபாறக் , செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் , வைத்தியசாலை வைத்தியர்கள் டொக்டர் எம்.ஏ.ஸி.எம்.அமீன் , டொக்டர் எம்.வகாப் , வைத்தியசாலை தாதி உத்தியோஸ்தர்கள் , வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

Post a Comment

0 Comments