Advertisement

Responsive Advertisement

100 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய டிப்பர்! - சாரதி தப்பியோட்டம்

மானிப்பாய் - உடுவில் வீதியில், இன்று அதிகாலை, விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 100 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டது. வீதியில் சென்ற டிப்பர் வாகனமொன்றை வழிமறித்து சோதனை செய்த போதே, அதிலிருந்து கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
இதன்போது, டிப்பர் சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவையும் டிப்பர் வாகனத்தையும், விசேட அதிரடிப் படையினர், மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments